• Fr.. Apr. 18th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தடைகளை தவிடுபொடியாக்கும் வைரவர்!

Apr. 13, 2023

கஷ்டமில்லாத வீடுகளை காண்பது அரிது. எதிலும் சிக்கல், தடை இல்லாமல் இருக்காது. எதிரிகளால், உறவினர்களால் தொல்லை, எடுத்த காரியத்தை முடிக்க முடியவில்லையா? நினைத்த காரியத்தை தொடங்கவே முடியவில்லையா? அப்படியென்றால் பைரவரை வழிபட்டால் உங்களுக்கு அவர் வழிகாட்டுவார்.

சிவபெருமானின் கோவில்களில் காவல் தெய்வமாக காத்து நிற்பவர் பைரவர். பன்னிரெண்டு கரங்களுடன் சந்திரனை தலையில் கொண்டு, நாகத்தை முப்புரிநூலாக எடுத்து வீரமான திருக்கோலம் பூண்டவர் பைரவர். சிவபெருமானின் காவலர் மட்டுமல்ல அனைவரையும் உச்சத்திற்கும், கீழ் நிலைக்கும் கொண்டு போகும் நவகிரகங்களில் சக்தி மிக்கவரான சனி பகவானின் குருவானவர் பைரவர்.

ஆதலால் பைரவரை வழிபடுவது பல்வேறு வகையில் பல அனுகூலங்களை தரும். மனமுருக வேண்டி நின்றால் அனைத்து செயல்களிலும் காவலாக வருபவர் பைரவர். பௌர்ணமிக்கு பிறகான தேய்பிறை காலத்தில் வரும் அஷ்டமி திதியில் பைரவரை வணங்குவது பல்வேறு மகிமைகளை அள்ளித் தருகிறது.

தேய்பிறையில் வரும் அஷ்டமி திதியில் விரதமிருந்து சிவாலயங்களுக்கு சென்று பைரவர் திருவிக்ரஹத்திற்கு செவ்வரளி மாலை சார்த்தி, பைரவாஷ்டக பாராயணம் செய்து வந்தால் சகல தடைகளும் நீங்கும். எதிரிகளால் ஆபத்து, தொடங்கிய செயலை முடிக்க முடியாத நிலை ஆகிய தடைகளை உடைத்து காப்பார் பைரவர்.சனியின் குருவான பைரவரை வழிப்படுவதன் மூலம் சனியின் பார்வையில் உள்ள ஜாதகக்காரர்கள் சனிபகவானின் உக்கிரத்திலிருந்து காத்துக் கொள்ள முடியும். பைரவரின் வாகனம் நாய். எனவே பைரவரை வழிபடும்போது தெருவில் நாய்களுக்கு பிஸ்கட் அல்லது உணவிடுவது பைரவரின் அருளை தீர்க்கமாக கிடைக்க செய்யும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed