யாழில் ஆர்கானிக் புளிப்பு வாழைப்பழம் முத்தால் தொகுதி துபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 350 ஏக்கரில் பயிரிடப்பட்ட 25,000 கிலோகிராம் இயற்கை புளிப்பு வாழைப்பழங்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் வாரந்தோறும் துபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்ய விவசாய அமைச்சு நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (11-04-2023) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இது தொடர்பான உண்மைகளை முன்வைத்தார்.
யாழில் புளிப்பு வாழைப்பயிர்ச் செய்கையில் இரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை எனவும், அதற்கு இயற்கை உரங்களையே விவசாயிகள் பயன்படுத்துவதால், எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாணத்தில் புளிப்பு வாழைப்பழங்களுக்கு அதிக கேள்வி கிடைக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.