அவுஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து வடக்கு பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியொன்றுக்கு விடுமுறையை கழிப்பதற்கு சென்ற இரண்டு இலங்கையர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
59 மற்றும் 21 வயதுடைய தந்தை மற்றும் மகன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
எட்டு வருடங்களுக்கும் மேலாக மெல்போர்னில் உள்ள போக்குவரத்து நிறுவனத்தில், உயிரிழந்த தந்தை பணிபுரிந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள், குயின்ஸ்லாந்தில் கிரிஸ்டல் கேஸ்கேட்ஸ் நீர்வீழ்ச்சியை பார்வையிட்டதுடன், அங்கு நீராடியுள்ளனர்.
தண்ணீரில் நீந்திக் கொண்டிருந்த தந்தை முதலில் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவரது மகனும் மகளும் அவரை மீட்க முயன்று நீரோட்டத்தில் சிக்கியுள்ளனர்.