குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் இன்ஃப்ளூயன்ஸா A மற்றும் B வைரஸ்கள் பரவுவது அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறைகள் தெரிவிக்கின்றன.
2 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அடிப்படை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டுமென லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.’.
மேலும் இருமல், சளி எதிர்வினை, தலைவலி, அதிக காய்ச்சல், வாந்தி, கண்களில் நீர் வடிதல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும் என விசேட வைத்திய நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.