• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் தாடியினால் வாகனம் இழுத்து சாகசம் புரிந்த முதியவர்

Apr 11, 2023

யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் நபர் ஒருவர் தனது தாடியின் பலத்தை மாத்திரம் பிரயோகித்து 1km தூரம் பட்டா வாகனத்தை இழுத்து சாகசம் நிகழ்த்தியுள்ளார்.

குறித்த பகுதியை சேர்ந்த 59 வயதான திருச்செல்வம் என்ற நபரே இந்த சாகசத்தை நிகழ்த்தியுள்ளார்.

நேற்று பிற்பகல் 4.45 மணிக்கு தனது சாகச பயணத்தை மட்டுவில் சந்திரபுரம் சிவன் கோவிலடிக்கு அண்மையில் ஆரம்பித்து பிற்பகல் 5.30 மணியளவில் 1km தொலைவில் அமைந்துள்ள மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் தந்து பயணத்தை நிறைவு செய்திருக்கிறார்.

இதன்போது வீதிகளில் ஏற்றம் இறக்கம் என பல தடைகளையும் தாண்டி அவர் தனது சாகச பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed