ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து பெண்களுக்கு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது.
குறிப்பாக பெண்களுக்கு பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பெண்களுக்கு மேலும் ஒரு தடையை தாலிபான் அரசாங்கம் தற்போது விதித்துள்ளது.ஆப்கானிஸ்தானில் வடமேற்கு ஹெராத் மாகாணத்தில் தோட்டங்கள் அல்லது இடங்களை கொண்ட உணவகங்களுக்கு குடும்பங்கள் மற்றும் பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
பெண்கள் சரியாக ஹிஜாப் அணியாததால் தடை கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் ஆண்களும், பெண்களும் சந்திக்கும் பூங்கா போன்ற பசுமையான பகுதிகளை கொண்ட உணவகங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.