• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தொடருந்து விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் பலி!

Apr. 8, 2023

அளுத்கமவில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

வாதுவ, ரத்நாயக்கவில் வசிக்கும் 39 வயதுடைய குருகே நீல் பெரேரா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வாத்துவ-தல்பிட்டிய ரத்நாயக்க வீதியில் தொடருந்து கடவைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed