• Mi.. Apr. 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

முல்லைத்தீவில் விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் ஜேர்மனிக்கு

Apr. 7, 2023

முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில் பகுதியில் கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டில் இருந்து வருகைதந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்தார்.குறித்த பெண்ணும் அவரது அண்ணாவும் உந்துருளியில் சிலாவத்தை பகுதியில் இருந்து கொக்குளாய் செல்லும் வீதியில் அளம்பில் பகுதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்து ஏற்பட்டது.இந்த துயர சம்பவமானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

உயிரிழந்த பெண்ணின் மகளுக்கு எதிர்வரும் தினங்களில் மஞ்சல் நீராட்டுவிழா செய்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியான நிலையில் இந்த சோக சம்பவம் குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ளது.உயிரிழப்பு தொடர்பில் கணவனுக்கு தெரியவந்ததையடுத்து தனது மனைவியின் சடலத்தினை கணவன் ஜேர்மன் நாட்டிற்கு எடுத்து சென்றுள்ளார்.அவரின் இறுதி நிகழ்வுகள் ஜேர்மனியில் நடைபெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed