• Mo.. Apr. 14th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் பட்டப்பகலில் நடந்த திருட்டு

Apr. 6, 2023

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் பட்டப்பகலில் வீடு உடைத்து 09 பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் வசிப்போர் அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் நிலையில் புதன்கிழமை (5) தொழில் நிமிர்த்தம் அவர்கள் வெளியில் சென்ற வேளை வீட்டின் கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த 09 பவுண் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.வீட்டார் திரும்பி வந்த போதே வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த நகைகள் களவாடப்பட்டுள்ளமை தெரியவந்ததை அடுத்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed