• Fr. Nov 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்

Apr 1, 2023

பப்பாளி மரத்தின் பல பகுதிகள் மருத்துவக் குணம் மிக்கது.ஆனால் அதன் காய், பிஞ்சு, பால், விதை என அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.

பப்பாளியின் விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டால் வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கும்.

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
 
நன்கு பழுத்த பழத்தை கூழாக செய்து தேன் கலந்து முகத்துக்கு பூசி ஊறின பின் சுடு நீரில் கழுவ முகச்சுருக்கம் மாறி முகம் அழகு பெறும்.

பப்பாளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பார்வை திறன் அதிகரிக்கும்.

பப்பாளிக்காயை கூட்டாகச் செய்து சாப்பிட்டு வந்தால் குண்டான உடல் படிப்படியாக மெலியும்.

முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும். இது முகப்பருக்களைப் போக்கி, பொலிவைக் கூட்டும்.

பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக சரிசெய்யும்.

பப்பாளிக்காயின் பாலை வாய்ப்புண் மேல் பூச புண்கள் ஆறும்.

 உடலில் இறந்துபோன செல்களை நீக்கவும், தோலை பளபளப்பாக வைக்கவும் பப்பாளி சிறந்த மருந்தாகும். எனவே பப்பாளியை உணவில் சேர்த்துக் கொண்டால் பல பயன்கள் கிடைக்கும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed