• Mi. Dez 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஜெர்மனியில் அதிகாிக்கும் கருச்சிதைவை மேற்கொள்ளும் பெண்களின் தொகை !

Apr 1, 2023

ஜெர்மனி நாட்டில் கருச்சிதைவை மேற்கொள்ளும் பெண்களின் தொகை அதிகரித்துச்செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜெர்மனியில் கடந்த ஆண்டு 2022 கருச்சிதைவு செய்தவர்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்துள்ளதாக பிஸ்பாடலின் இருக்கின்ற புள்ளிவிபர திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 4 ஆயிரம் பேர் வரை கருசிதைவு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என தெரியவந்திருக்கின்றது.

இது 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 9.9 வீதம் உயர்ச்சியடைந்துள்ளதாக தெரியவந்திருக்கின்றது. 

2021 ஆம் ஆண்டு 94600 பேர் கருசிதைவை மேற்கொண்டுள்ளதாகவும் இதேவேளையில் 18 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களில் 70 சதவீதமாவர்கள் இவ்வாறு கரு சிதைவு செய்ததாகவும் 35 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் தொகை 19 சதவீதமாக உள்ளதாகவும் மேலும் 40 வயதுடையர்கள் 8 சதவீதமாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் இவ்வாறு கருசிதைவுகள் செய்யும் பெண்களிடையே பாரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது.

இதுபோன்ற கருசிதைவுகளை எதிர்வரும் காலங்களில் தடுப்பதற்கான நடவடிக்கைகளை குறித்த அமைப்புக்கள் மேற்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் இது தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed