• Mo. Nov 25th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வானில் நாளை நிகழப்போகும் அதிசயம்

Mrz 27, 2023

வானில் நாளைய தினம்(28.03.2023) ஐந்து கிரகங்கள் நிலாவிற்கு அருகே ஒரே வரிசையில் தோன்றப்போவதாக வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய கிரகங்களே இவ்வாறு ஒரே வரிசையில் வானில் தோன்றப்போவதாக தெரிவித்துள்ளனர்.

நாளையதினம், சூரியன் அஸ்தமனத்துக்கு பின்னர் மேற்கு தொடுவானை உற்றுக் கவனிப்பதனூடாக இந்த காட்சியை காணலாம் என நாசா விண்வெளி ஆய்வாளர் பில் குக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,இரவு வானில், தொடுவானம் தொட்டு பாதி வானம் வரை இந்த 5 கிரகங்களும் வரிசையாக காணப்படும்.

சூரியன் மறைந்த அரைமணி நேரத்திலேயே, புதனும், வியாழனும் தொடுவானத்துக்கு கீழே புதைந்துவிடும்.

வானம் தௌிவாக இருக்கும் நிலையில், மேற்குப்புறத்தை நன்றாக காணமுடியும் சூழலில் உலகின் எந்த மூலையில் இருந்தும் இந்த 5 கிரக வரிசையை காணலாம்.

வியாழன், வெள்ளி, செவ்வாய் கிரகங்கள் பிரகாசமானவை என்பதால் அவற்றைக் காண்பது ஓரளவு எளிது.

காணவே முடியாத யுரேனஸ் கிரகத்தை காண்பதற்கான அரிய வாய்ப்பாக இது இருக்கும். வெள்ளிக்கு மேலே அது, பச்சையாக மிளிரும்.

இதுபோன்று பல்வேறு கிரகங்கள், பல்வேறு எண்ணிக்கையில் வானில் வரிசையாக தோன்றுவது அவ்வப்போது நடக்கும் நிகழ்வாகும். கடந்த ஆண்டு கோடைகாலத்தில் 5 கிரகங்கள் வரிசையாக தோன்றின.

மீண்டும் அதுபோன்ற ஒரு நிகழ்வு கடந்த ஜூனில் நடந்தது.”என தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed