• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஜப்பான் நாட்டிற்கு அதிகளவில் படையெடுக்கும் இலங்கையர்கள் 

März 26, 2023

ஜப்பானில் உள்ள சம்மு நகரில் பதிவு செய்யப்படும் இலங்கையர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக ஜப்பானிய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி கரணமாக சிபா மாகாணத்திலுள்ள உள்ள சம்மு நகருக்குக் குடியேற்றவாசிகள் அதிகமானோர் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு வருகை தந்துள்ள இலங்கையர்களில் ஜப்பானிய மொழி பேச முடியாத குழந்தைகளுக்குக் கல்வி கற்பது உள்ளூர் ஆரம்ப, கனிஸ்ட மற்றும் உயர்நிலைப் பாடசாலைகளில் ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது என்று ஜப்பானியச் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

சம்மு நகர அரசாங்கம் சில பாடசாலைகளில் அத்தகைய குழந்தைகளுக்கு ஜப்பானிய மொழி வகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.  

இருப்பினும், புதிதாக வருபவர்களில் பலர் பாடங்களை முழுமையாகப் புரிந்துகொள்வதில் சிரமப்படுகிறார்கள்.

2013 ஏப்ரலில் சம்முவில் 57 ஆக இருந்த இலங்கையர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு பெப்ரவரி மாத இறுதியில் 750 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் பலர் பொறியாளர் மற்றும் சர்வதேச சேவைகளில் நிபுணத்துவம் அல்லது வேறு தொழில்களுக்குரிய விசாவில் ஜப்பானுக்கு வந்துள்ளதாக ஜப்பானியச் செய்தி நிறுவனம் கூறுகிறது.

ஜப்பானுக்குத் தனியாக வந்த இந்த பணியாளர்கள், இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கள் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வருகின்றனர் என்றும் அந்நாட்டு செய்தி தெரிவிக்கிறது.

இதன் விளைவாக, நகரத்தில் உள்ள ஆரம்ப மற்றும் கனிஷ்ட, உயர்நிலைப் பாடசாலைகளில் சேரும் இலங்கைக் குழந்தைகளின் எண்ணிக்கை மார்ச் 2021 இல் 20 இல் இருந்து இந்த ஆண்டு பெப்ரவரி பிற்பகுதியில் 71 ஆக உயர்ந்துள்ளது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed