ஜப்பான் நாட்டின் அமோரி மாகாணத்தில் பல கோழிப்பண்ணைகள் உள்ளன. அதில் ஒரு பண்ணையில் இருந்த கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அந்த பண்ணை மற்றும் அதிலுள்ள உபகரணங்கள் கிருமி நீக்கம் செய்யப்பட்டன. மேலும் அதனை சுற்றிலும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள பகுதிகளில் கோழிகள் மற்றும் முட்டைகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த பறவைக்காய்ச்சல் அதிவேகமாக பரவி வருவதால் நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள கோழிகளை பாதுகாப்பதற்காக இந்த பண்ணையில் சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் கோழிகளை அழிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
ஜப்பானில் கடந்த சில மாதங்களாக பறவைக்காய்ச்சல் தீவிரமடைந்து வருவதும், இதன் காரணமாக லட்சக்கணக்கான கோழிகள் கொல்லப்படுவதும் குறிப்பிடத்தக்கது.