வவுனியாவில் இன்று மாலை பெய்த மினிசூறாவளியுடன் கூடிய மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளது.
வவுனியாவில் கடந்த இருதினங்களாக மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்துவருகின்றது.
இன்று மாலை மினிசூறாவளியுடன் கூடிய கடும் மழை பெய்தமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளது.
குறிப்பாக காற்றின் வேகம் அதிகரித்தமையால் நகரின் முக்கிய வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்தது. இதனால் வீதிகளுடனான போக்குவரத்து தடைபட்டது.
இதேவேளை, பல இடங்களில் மரக்கிளைகள் வீடுகளுக்கு மேல் முறிந்து வீழ்ந்ததில் வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், வீட்டின் மதில்களும் சரிந்து வீழ்ந்துள்ளது.
அத்தோடு, காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்ட கொட்டகைக்கு மேல் மரக்கிளை முறிந்து வீழ்ந்தமையால் கொட்டகை பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.