இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்றைய தினம் (24-03-2023) பதிவாகியுள்ள இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை நேற்றைய தினம் 310.62 ரூபாவாக காணப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் 313.52 ரூபாவாக பதிவாகியுள்ளது.
விற்பனை விலை 332.99 ரூபாவில் இருந்து 336.09 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அமெரிக்க டொலரொன்றின் கொள்வனது விலையானது 310 ரூபாவிலிருந்து 315 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதேவேளை விற்பனை விலையானது 325 ரூபாவிலிருந்து 330 ரூபாவாக அதிகரிப்பினை காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 311.69 ரூபாவிலிருந்து 314.16 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன் விற்பனை விலையானது 330 ரூபாவிலிருந்து 332.50 ரூபாவாக அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது.