• Sa.. Apr. 12th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஜெனீவாவில் திடீரென பரவி வரும் கொடிய நோய் 

März 23, 2023

விஸில் ஜெனீவா நகரத்தில் சொறி சிரங்கு எனப்படும் scabies நோய் தற்போது அதிகரித்துவருகிறது.

மேலும், வெப்பமான, அதிக மக்கள்தொகையும், வறுமையும் இணைந்து காணப்படும் நாடுகளில் பொதுவாக இந்த scabies நோய் அதிக அளவில் காணப்படும் என உலக சுகாதார அமைப்பு குறிப்பிடுகிறது.

இருப்பினும், செல்வந்தர்கள் அதிகம் வாழும் ஜெனீவாவில் தற்போது இந்த scabies அதிகம் பரவிவருகிறது.

இந்த ஆண்டு துவங்கியதிலிருந்து, இதுவரை 51 பேருக்கு இந்த scabies உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ஜெனீவா பல்கலை மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்த நோய், mites எனப்படும் சிறுபூச்சிகள் தோலுக்கடியில் முட்டையிடுவதால் உருவாகிறது. அவை தோலில் அரிப்பை ஏற்படுத்துகின்றன.

இந்த நோய் குடும்பத்துக்குள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவக்கூடியதாகும்.

பலர் கோவிடைக் குணமாக்கும் என்று நம்பி எடுத்துக்கொண்ட Ivermectinதான் இந்த scabiesக்கான மருந்து. உண்மையில் அதை கோவிட் சிகிச்சைக்குப் பயன்படுத்தக்கூடாது, இந்த scabiesக்கு அது நல்ல பலன் தரும்.

ஆனால், இந்த Ivermectin சுவிட்சர்லாந்தில் காப்பீட்டின் கீழ் வருவதில்லை. ஆகவே, scabies சிகிச்சைக்கான செலவும் அதிகம்தான். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed