• Fr.. Apr. 18th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் பயங்கரம்!! லொறி மோதி தந்தையும் மகளும் பலி

März 21, 2023

யாழ் குடத்தனையில் மோட்டார் சைக்கிள் – பாரவூர்தியும் மோதி கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டாரில் சென்ற தந்தை சம்பவ இடத்திலே மரணம் அடைந்துள்ளார்.

பலத்த காயங்களுக்கு உள்ளான மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்ட பின்னர் சிகிச்சசை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அம்மன் பகுதியிலிருந்து மணல் மண்ணை ஏற்றிக் கொண்டு பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பார ஊர்தியும், பருத்தித்துறை பகுதியிலிருந்து மருதங்கேணி நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்றவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பலியானவர் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியை சேர்ந்த சின்னையா கணேசசிங்கம் (வயது 44) என தெரிவிக்கப்படுகிறது.

அவரோடு கூட வந்த பெண்மணி தற்போது சிகிச்சை தீவிர சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார மருத்துவமன மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான தீவிர விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed