• Fr.. Apr. 18th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுற்றுலாவுக்கு சென்ற 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி மரணம் –

März 21, 2023

அம்பாறை மாவட்டத்திலிருந்து இன்று (21) அதிகாலை வெல்லவாய காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட எல்லேக்கு குளிக்கச் சென்ற 10 இளைஞர்களில் நால்வர் மரணமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கல்முனை, சாய்ந்தமருது மற்றும் சம்மாந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த 10 இளைஞர்களே இவ்வாறு குளிக்கச் சென்றுள்ளனர்.

இவர்களுள் 21-22 வயதிற்கு இடைப்பட்ட 04 இளைஞர்கள் மரணமடைந்துள்ளனர்.

இவர்களில் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும், சம்மாந்துறை மற்றும் சாய்ந்தமருதைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை வெல்லவாய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வெல்லவாய – எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 4 இளைஞர்கள் இன்று (21) காலை நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளனர்.

10 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவொன்று இங்கு நீராட சென்றதாகவும் அவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கல்முனை, காத்தான்குடி மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 20 முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்களே காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போன இளைஞரை தேடும் நடவடிக்கையை காவல்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் ஆரம்பித்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed