• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உடுவில் பகுதியில் 19 வயது யுவதி ஒருவர் தற்கொலை.

Mrz 21, 2023

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் 19 வயது யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

குறித்த யுவதி வீட்டில் யாரும் இல்லாத வேளை தனது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.

அவர் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலமானது மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed