• So. Dez 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பாணின் விலை மேலும் குறைய வாய்ப்பு!

Mrz 14, 2023

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமையால், பாணின் விலையை மேலும் குறைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் அண்மையில் கோதுமை மாவின் விலையை 15 ரூபாவால் குறைத்தன.

இதனையடுத்து 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டது.

இந்தநிலையில் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமையால், பாணின் விலையை மேலும் குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை மொத்த விற்பனையில் முட்டை ஒன்றின் விலை 56 ரூபாவாக அதிகரித்துள்ளமையால், தங்களது உற்பத்திகளை மேற்கொள்வதில் பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed