• Mi. Dez 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

விமான டிக்கட்டுகளின் விலை ஏற்படவுள்ள மாற்றம்!

Mrz 10, 2023

 நாளை முதல் விமான டிக்கட்டுகளின் விலை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு அண்மைக்காலமாக அந்நிய செலாவணியின் உள்வருகை அதிகரித்து வருகிறமை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகளவான டொலரின் உள்வருகையால் ரூபாவின் பெறுமதி கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் குறைக்கப்பட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விமான டிக்கட்டுகளின் விலையைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி நாளை முதல் விமான டிக்கட்டுகளின் விலை 8% குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed