இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட குறைந்த எண்ணிக்கையிலான நினைவு நாணயங்களை மத்திய வங்கியின் விற்பனை நிலையங்கள் ஊடாக இன்று முதல் விற்பனை செய்யவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது
அவ் நாணயங்களில் ஒன்றை 6000 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் நாணயங்களின் விற்பனை முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் செய்யப்படும் மற்றும் அடையாள அட்டையின் விவரங்களின் அடிப்படையில் ஒரு நபருக்கு ஒரு நாணயம் விற்கப்படும்