கோதுமை மாவன் விலை குறைப்புடன், கொத்து ஒன்றின் விலையும் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொத்து ரொட்டியின் விலை எவ்வளவு ரூபாவினால் குறைக்கப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
கொத்து ரொட்டியின் விலை குறைப்பு தொடர்பில் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் உரிய விலைகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கோதுமை மா ஒரு கிலோ கிராமின் விலையும் குறைக்கப்பட்டது.
இதன்படி, கிலோகிராம் ஒன்றுக்கு 15 ரூபாவினால் இவ்வாறு கோதுமை மா விலை குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாணின் விலையும் குறைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.