யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியை சேர்ந்த 19 வயதினை உடைய இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் (05-03-2023)தவறான முடிவால் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
குறித்த இளைஞன் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதிக்கு சென்று அங்கு கயிறு ஒன்றினை மரத்தில் மாட்டி தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.அவரது கையில் சில வசனங்கள் எழுதப்பட்டுள்ளன இதனை பார்த்த பொலிசார் காதல் தோல்வியால் குறித்த இளைஞன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என கூறியுள்ளனர்.
உயிரிழந்த இளைஞனின் உடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.