• Di. Dez 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மேலும் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த டுவிட்டர்!

Feb 28, 2023

டுவிட்டர் நிறுவனத்தில் இருந்து மேலும் 200 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

எலான் மஸ்க் (Elon Musk) கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் பிரபல சமூகவலைத்தளமான டுவிட்டரை பெரும் தொகை கொடுத்து வாங்கினார்.

டுவிட்டர் நிறுவனம் தன்வசமானதும் அதன் நிர்வாகத்தில் பல அதிரடி மாற்றங்களை எலான் மஸ்க் கொண்டு வந்தார்.

அந்த வகையில் முதல் பணியாக டுவிட்டரின் மொத்த ஊழியர்கள் 7,500 பேரில் 4,000-க்கும் மேற்பட்டோரை அதிரடியாக பணிநீக்கம் செய்தார்.

மேலும் சிக்கன நடவடிக்கை என்கிற பெயரில் மஸ்க் கொண்டு வந்த மாற்றங்களால் அதிருப்தியடைந்த 100 க்கும் மேற்பட்ட டுவிட்டர் ஊழியர்கள் ராஜினாமா செய்தனர்.

அதன் பின்னரும் டுவிட்டர் சிறிய அளவிலான பணி நீக்கங்களை தொடர்ந்து வருகிறது. இதன்காரணமாக டுவிட்டர் ஊழியர்களின் எண்ணிக்கை 2 ஆயிரமாக குறைந்துள்ளது.

இந்த நிலையில் டுவிட்டரில் இருந்து மேலும் 200 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளர். அதாவது தனது மொத்த ஊழியர்களில் 10 சதவீதம் பேரை டுவிட்டர் பணி நீக்கம் செய்துள்ளது.

இதனால் டுவிட்டர் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 1,800 ஆக குறைந்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed