• So. Dez 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையின் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை !

Feb 4, 2023

காலநிலை குறித்து 10 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய இடியுடன் கூடிய மழை மற்றும் தற்காலிக பலத்த காற்றுடன் பலத்த மின்னல்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், புத்தளம் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் அந்தந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் தற்காலிக பலத்த காற்றுடன் பலத்த மின்னல்கள் ஏற்படக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை மக்களை மரங்களுக்கு அடியில் தஞ்சம் அடைய வேண்டாம் என்றும் வீட்டிற்குள் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed