அமெரிக்க நாட்டிலுள்ள ராணுவத்தின் கண்காணிப்பில் உள்ள மொன்டானா பகுதியில் சீனாவைச் சேர்ந்த உளவு பலூன் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
உலக நாடுகளின் நடக்கும் முக்கிய பிரச்சனைகளில் தலையிட்டு வருவதால் இந்த நாட்டின் பேச்சுக்கு பெரும் மதிப்புள்ளது.
ஆனால், அமெரிக்காவுக்கே ரஷியாவும் வடகொரியா மற்றும் சீனாவும் கடும் சவால் விடுத்து வருகின்றன.இந்த நிலையில்,அமெரிக்க நாட்டில் ராணுவ கண்காணிப்பில் உள்ள அணுசக்தி ஏவுதளம் அமைந்திருக்கும் மொன்டானா பகுதியில் சீன நாட்டைச் சேர்ந்த உளவு பலூன் பறந்துள்ளது.
இதைச் சுட்டு வீழ்த்த ராணுவத்தினர் முயற்சித்தனர், ஆனால், சுட்டு வீழ்த்தினால் அணு சக்தி ஏவுதளத்திற்கு பாதிப்பு என்பதால் இதை விட்டுவிட்டனர்.
இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் அந்தோனி பிளிங்கன் இந்த உளவு பலூனால் தன் பயணத்தை ஒத்திவைப்பதாக தகவல் வெளியாகிறது.