• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மரணமடைந்த முதியவர்! அடையாளம் காண உதவுமாறு வவுனியா பொலிஸார் கோரிக்கை ;

Feb 1, 2023

ஏ9 வீதியில் மயங்கி விழுந்து மரணமடைந்த முதியவரை அடையாளம் காண உதவுமாறு வவுனியா பொலிஸார்  நேற்று  (31.01.2023) கோரியுள்ளனர்.

வவுனியா ஏ9 வீதி, மூன்று முறிப்பு பகுதியில் கடந்த 13 ஆம் திகதி வீதியில் பயணித்த முதியவர் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.

அவ் வீதியால் சென்றவர்கள் முதியவர் வீதியில் கிடப்பதை அவதானித்து அவசர நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, அவ்விடத்திற்கு வந்த நோயாளர் காவு வண்டி குறித்த முதியவரை வண்டியில் ஏற்றி வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், வைத்தியசாலைக்கு செல்வதற்கு முன்னரே அவர் மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த முதியவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், முதியவரை அடையாளம் காண உதவுமாறு வவுனியா பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.

குறித்த முதியர் 70 வயது மதிக்கத்தக்கவர். 5அரை அடி உயரமுடையவர். தாடியுடன் உள்ள அவர் கறுப்பு மற்றும் மஞ்சள் நிறம் கலந்த சேட்டும், நீல சாரமும் அணிந்துள்ளார்.

தனது இரண்டு கைகளிலும் பச்சை குத்தியுள்ளதுடன், இடது கையில் பிள்ளையார் உருவமும், வலது கையில் நாகபாம்பு உருவமும் குத்தியுள்ளார்.

இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் வவுனியா சிறுகுற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி அல்லது வவுனியா பொலிஸ் நிலையத்தில் தகவல் வழங்குமாறு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed