வாட்ஸ்அப் மற்றுமோர் புதிய அம்சத்தினை வெளியிட்டுள்ளது வீடியோ அழைப்புகளை வசதியாக மாற்றும் புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது.
அதாவது புதிய “ஸ்விட்ச் கேமரா” பயன்முறையானது, வீடியோ அழைப்பின் போது பயனர்கள் முன் மற்றும் பின் கேமராக்களை மிக எளிதாக பயன்படுத்தக்கூடிய வசதிகளை இது கொண்டுள்ளது.
தற்போது இப் புதிய அம்சம் iOS மற்றும் Android சாதனங்களுக்கு மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வீடியோ அழைப்பின் போது கேமராக்களை இடையில் மாறுவதற்கான திறன், சில காலமாக பயனர்களால் கோரப்பட்டு வந்த ஒரு அம்சமாகும். தற்போது ஒரே ஒருமுறை தொடுவதன் மூலம் கேமராக்களை மாற்றுவதனை சுலபமாக்கியுள்ளது.
அடிக்கடி வீடியோ அழைப்புகளைப் பயன்படுத்துபவர்களுக்கு வாட்ஸ்அப்பின் இந்தப் புதிய அம்சம் மிக பயனுள்ளதாக அமையும்.