• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பூமியை முதன் முறை நெருங்கி வரும் வால் நட்சத்திரம்

Jan 30, 2023

50,000 ஆண்டுகளில் முதன் முதலாக பூமியை நெருங்கும் ஒரு பச்சை நிற வால் நட்சத்திரம் ஒன்றை வானியலாளர்கள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 2022-ம் ஆண்டு முதல் பிரகாசமாக தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜனவரி மாதத்தில் மிகவும் அருகில் நெருங்கி வந்த வண்ணம் உள்ளது.

இந்த வால்மீனை வெறும் கண்ணாலேயே பார்க்கலாம். கடந்த ஜனவரி 12-ம் திகதி சூரியனில் இருந்து பெரிகோலினை கடந்து வந்து பூமி வட்டபாதையில் செல்லும் வால் நட்சத்திரம் பெப்ரவரி 1-ம் திகதி பூமிக்கு அருகில் நெருங்கி வரும். இவ் நிகழ்வு 50 ஆயிரம் வருடங்களுக்கு பிறகு நடைபெறுகிறது.

நாசாவின் வெளியிட்டுள்ள தகவலின் படி , வடக்கு அரைக்கோளத்தில், பச்சை வால் நட்சத்திரம் ஜனவரி பிற்பகுதியில் விடியற்காலையில் தென்படும். அத்தோடு வடக்கு அரைக்கோளத்தில் உள்ள வால் நட்சத்திரத்தை பார்ப்பதற்கான கடைசி வாய்ப்பு ஜனவரி 30 அன்று தான் இறுதியாக பார்க்க இயலும்.

அப்போது போலரிஸ், நார்த் ஸ்டாரின் முடிவிற்கு இடையில் தெரியும். அதன் பின்னர் பெப்ரவரி தொடக்கத்தில், வால்மீன் தெற்கு அரைக்கோளத்தில் தெரியும் என்று மேலும் நாசா கூறியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed