கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து நீர்கொழும்பு வரை 25 புகையிரதநிலையங்களை அபிவிருத்தி செய்து மெட்ரோ ரயில் திட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்தில் இருந்து நீர்கொழும்புவரை 41 கிலோமீற்றர் தூரத்திற்கு தூண்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாதையில் இந்த மெட்ரோ ரயில் சேவையை முன்னெக்கவுள்ளது.
உத்தேச மெட்ரோ தொடருந்து செயற்திட்டத்திற்காக தனியார் நிறுவனம் ஒன்று 2.5 பில்லியன் டொலர் பெறுமதியான நிதியை முதலீடு செய்யவுள்ளது இத்திட்டம் தொடர்பில் அமைச்சர் முதலீட்டாளர்களின் கருத்துக்களை பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த திட்டத்திற்கு சமகாலத்தில் தெரிவு செய்யப்பட்ட 05 ரயில் நிலையங்களும், அதனை அண்டியுள்ள பகுதிகளும் புதிய நகரங்களாக நவீன மயப்படுத்தப்படவுள்ளன.
இத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அமைச்சரவை அங்கிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.