• Di. Nov 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

புத்தூர்.நாவக்கிரி பகுதியில் பிறந்து 30 நாட்களான குழந்தை உயிரிழப்பு!

Jan 27, 2023

யாழ்ப்பாணம் புத்தூர் நாவக்கிரி பகுதியில் பிறந்து முப்பதே நாட்களான குறித்த குழந்தை இன்று தாயாரிடம் பால் அருந்திக் கொண்டிருந்தபோது புரக்கேறியதில் உயிரிழந்துள்ளது.

புத்தூர் நவக்கரி மாதா கோவிலடியை சேர்ந்த நிசாந்தசிறி என்பவரின் மூன்றாவது ஆண் குழந்தை தாயிடம் பாலருந்திய போது திடீரென புரக்கேரியது இதனை அடுத்து அச்சுவேலி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது குழந்தை உயிழந்துள்ளது.

குழந்தை பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிசார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர். நாளைய தினம் 31-ஆம் நாள் நிகழ்வுகள் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த வேளையில் குழந்தையின் இறப்புச் சம்பவம் அவர்களது குடும்பத்தை பாரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed