• So.. Apr. 20th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அமெரிக்காவில் 6 மாத குழந்தை, தாய் உட்பட 6 பேர் சுட்டுக் கொலை

Jan. 17, 2023

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள துலாரே நகரில் ஒரு வீட்டில், 6 மாத குழந்தை, தாய் உட்பட 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதோடு சிலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக பொலிஸார் தெரிவிக்கையில்,

குழந்தையையும், 17 வயது தாயையும் தலையில் சுட்டுள்ளனர். போதை பொருள் கும்பல் தாக்குதலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

இத்தாக்குதலில் இரண்டு பேர் ஈடுபட்டுள்ளனர். இது தற்செயலான தாக்குதல் அல்ல. ஒரு குடும்பத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த வீட்டில் கடந்த வாரம் போதை பொருள் தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed