• Mo.. Dez. 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பூமியை போன்று மற்றுமோர் கிரகத்தை கண்டுப்பிடித்த நாசா விஞ்ஞானிகள்

Jan. 14, 2023

பூமியை போன்று மற்றுமோர் கிரகத்தை கண்டுப்பிடித்த நாசா விஞ்ஞானிகள்!

பூமியை போன்ற மற்றுமொரு கிரகம் ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை பயன்படுத்தி அவர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

பூமியில் இருந்து 41 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்த கோள் பூமியை ஒத்ததாக அமைந்துள்ளது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

LHS 475 b  என பெயரிடப்பட்டுள்ள இந்த கோளின் வளிமண்டல அமைப்பு எப்படியானது என்பது இன்னும் தெளிவாகவில்லை.

இந்த கோளில் சில வாயுக்கள் இருப்பதாக ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பௌதீக ஆய்வுக்கூடத்தில் கலாநிதி பட்டதாரியான ஜேகப் லஸ்டிங் யேகேர் தெரிவித்துள்ளார்.

அந்த கிரகத்தில் சனிக்கிரகத்தின் சந்திரனான டைடனில் இருக்கும் வாயுவை ஒத்த கன மீதேனுடன் கூடிய வாயு இருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாறை கிரகமான இந்த கிரகம் பூமியை விட ஒரு வீதம் சிறியது. இந்த கிரகத்தில் உயிர்கள் வாழ்கின்றனவா அல்லது மனிதர்கள் வாழ முடியுமா என்பதை குறித்து உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed