• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியாவில் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Jan. 14, 2023

பிரித்தானியாவில் எதிர்வரும் நாட்களில் அதிக மழை, வெள்ளம் மற்றும் குளிர் காலநிலைக்கு தயாராகுமாறு இங்கிலாந்து முழுவதும் உள்ள மக்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்.

சுற்றுச்சூழல் நிறுவனம், குறிப்பாக மேற்கு மற்றும் தென்மேற்கு இங்கிலாந்தில் 103 வெள்ள எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

மோசமான வானிலை ஏற்கனவே நூற்றுக்கணக்கான வீடுகளை சேதப்படுத்தியுள்ளதுடன் பலர் மின் துண்டிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் இங்கிலாந்தில் வெப்பநிலை குறைவதால் கடுமையான குளிர் காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது வியாழன் காலை வரை இங்கிலாந்தின் பெரும்பகுதியில் நடைமுறையில் இருக்கும். குளிரால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உடல்நல அபாயங்கள் அதிகரிக்கலாம் என்பதுடன் சில சேவைகளை சீர்குலைக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது வடக்கு இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை, காற்று மற்றும் பனிக்கான மஞ்சள் வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed