• So. Dez 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரான்ஸ் தீவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட இளைஞர்கள்

Jan 14, 2023

பிரான்சின் ரீயூனியன் தீவின் அதிகாரிகள் 46 இலங்கை பிரஜைகளை விமானம் மூலம் திருப்பி அனுப்பியுள்ளனர்.

கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்களே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி நீர்கொழும்பில் இருந்து பல நாள் மீன்பிடி இழுவை படகில் குறித்த நபர்கள் புறப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

பல நாள் மீன்பிடி கப்பலின் பணியாளர்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 43 ஆண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி பிரான்சின் ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் 13 வயதுக்கும் 53 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இந்த நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய தெஹிவளையைச் சேர்ந்த ஆட்கடத்தல்காரர்கள், ஒவ்வொரு நபரிடமிருந்தும் 200,000 ரூபா தொடக்கம் 4.5 மில்லியன் ரூபா வரை அறவீடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

ரீயூனியன் தீவிற்கு மக்கள் சட்டவிரோதமாக நுழைவதை பிரெஞ்சு அரசாங்கம் அனுமதிக்கவில்லை என்றும், அத்தகைய நபர்கள் உடனடியாக திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் கடற்படை தெரிவித்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed