• So. Dez 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வெள்ளிக்கிழமைகளில் மறந்தும்கூட இவற்றை செய்யாதீர்கள்!

Jan 13, 2023

வெள்ளிக்கிழமைகளில் மறந்தும் சில விஷயங்களை எப்பவுமே செய்யகூடாது என சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏனெனில், மகாலட்சுமிக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது.

நம்மிடம் செல்வம் வருவதற்கும், நிரந்தரமாக தங்குவதற்கும் வெள்ளிக்கிழமைகளில் சில அடிப்படையான விஷயங்களைக் கடைப்பிடித்து வர வேண்டும்.

பொதுவாகவே வெள்ளிக்கிழமைகளில் நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு கடனாக கொடுப்பது போன்ற செயல்களால், லட்சுமி நம்மை விட்டு நிரந்தரமாகவே சென்று விடுவாள் என்பது ஐதீகம்.

அதே போல நாம் வசிக்கும் வீடு எந்த அளவிற்கு தூய்மையாகவும், மங்களகரமாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு திருமகளின் அருளும் அந்த இல்லத்தில் நிறைந்திருக்கும்.

செல்வம் தங்காது

அந்தவகையில் நமது சாஸ்திரம் சில அடிப்படையான விஷயங்களை வகுத்து வைத்திருக்கிறது.

எவ்வளவோ சம்பாதித்தாலும், பொருள் வீடு வந்து சேரலை.. நிரந்தரமாக செல்வம் தங்காமல் கடனில் தத்தளிக்கிறேன் என்று சிலர் புலம்புவதைக் கண்டிருக்கலாம். அதற்குப் பின்னால் இந்த மாதிரியான அஜாக்கிரதை காரணங்களாக இருக்கும்.

வறுப்பது, புடைப்பது

அந்தவகையில் வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது, புடைப்பது கூடாது.

இரவில் கடன்

குறிப்பாக பச்சரிசியை அஜாக்கிரதையாக கையாளாதீர்கள்.

அப்புறம் பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்குதல், கடன் கொடுத்தல் இரண்டுமே கூடவே கூடாது.

எனவே இந்த விஷயங்களை உங்களுக்குத் தெரியாமலேயே இதுநாள் வரையில் செய்து வந்திருந்தால், இனிமேல் அவற்றினை தவிர்த்து விடுங்கள் . 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed