சீனாவில் ஊரடங்கு தளர்க்கப்பட்டதால் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் இதுதொடர்பான தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க அந்நாட்டு அரசாங்கம் மறுத்து வருகின்றது
இந்த சூழலில் சீனாவின் கிராமபுறங்களில் கொரோனா பரவல் மிகவும் மோசமாக உள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் அதிகமாக பாதிக்கப்படும் சூழலில் கிராமபுற மருத்துவமனைகளுக்கு போதிய மருந்துகள் கிடைக்காததால் அவை மூடப்பட்டுள்ளதாகவும், நடுத்தர நகரங்களுக்கு மக்கள் சிகிச்சைக்கு சென்றாலும் அங்கும் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, முதியவர்களை கொரோனா அதிகமாக பாதிக்கும் நிலையில், அவர்கள் சிகிச்சை கிடைக்காமல் மன அழுத்தம் அடைந்து தற்கொலை செய்துக் கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.