ஜெர்மனியில் குளிர்காலம் முடிவதற்குள் புதிய ஆபத்தான கொரோனா மாறுபாடு ஏற்படும் என்ற அச்சம் ஜெர்மனி சுகாதார பிரிவு நிபுணர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு அமெரிக்காவில் தீவிரமடைந்து வரும் புதிய COVID-19 துணை வகை குறித்தும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்தும் ஜேர்மனி சுகாதார அமைச்சர் கவலை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பெர்லின் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் கூறினார். சீனாவில் அதிகரித்து வரும் COVID தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அளவை பார்க்கும்போது, உலகின் பெரும்பகுதியில் தொற்று நோய் நிபுணர்களும் அதிக அளவில் பரவக்கூடிய Omicron XBB.1.5 பற்றி அதிக கவலை கொண்டுள்ளனர்.
இந்த மாறுபாடு 40% க்கும் அதிகமான அமெரிக்க தொற்றாளர்களை உருவாக்கியதென கடந்த வார வெளியான அதிகாரப்பூர்வ தரவு தெரிவித்துள்ளது.
அத்தகைய மாறுபாடு நம்மிடையே பரவுவதற்கு முன்பு நாம் குளிர்காலத்தை கடந்துவிடுவோம் என்று நம்புகிறோம் என்று சுகாதார அமைச்சர் கார்ல் லாட்டர்பாக் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
ஜெர்மனியில் XBB.1.5 தொற்று ஏற்படுகிறதா, எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை நாங்கள் கண்காணித்து வருகிறோம். என அவர் கூறியுள்ளார்.
அதிகரித்து வரும் நோய்த்தொற்றுகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் 10 அமெரிக்க மாநிலங்களில் ஏழு வடகிழக்கில் உள்ளன.