• Mi. Okt 30th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடா விசா மோசடி தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை !

Jan 9, 2023

இலங்கை பிரஜைகளுக்கு வாட்ஸ்அப் ஊடான விசா மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் விசேட அறிவித்தல் ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளது. 

ஒருபோதும் வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் வழியாக விசாக்கள் வழங்கப்படுவதில்லை.

அத்தோடு, உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் விசாக்களுக்குப் பதில் பணம் கேட்பதில்லை.

விசா தொடர்பான விவரங்களுக்கு https://www.canada.ca/en/services/immigration-citizenship.html எனும் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடுமாறு கனேடிய உயர்ஸ்தானிகராலயம் இலங்கையர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed