• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் 2 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

Jan 3, 2023

சுவாசக் குழாயின் மேற்பகுதியில் கிருமித் தொற்றாகி சளி கட்டியானமையால் மூச்சடைத்து இரண்டு மாத ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்றைய தினம் (02.01.2023) பதிவாகியுள்ளது.

யாழ். கல்வியங்காட்டைச் சேர்ந்த உமாரமணன் கேதுசன் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையில், குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டி விட்டு தூங்கவைத்த நிலையில் குழந்தை அசைவற்ற நிலையில் காணப்பட்டதால் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த உயிரிழப்பு தொடர்பில் நேற்று மாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed