அரச உத்தியோகத்தர்களுக்கான 4,000 ரூபா விசேட கொடுப்பனவு நேற்று (2) முதல் வழங்கப்படுகிறது.
அந்த கொடுப்பனவை அடுத்த மாதம் இறுதி வரை பெற்றுக் கொள்ள அரச ஊழியர்களுக்கு வாய்ப்பு உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விசேட முற்கொடுப்பனவு செலுத்துவது தொடர்பான சுற்றறிக்கை பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்போது 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதிக்குப் பின்னர், இந்த கொடுப்பனவு செலுத்தப்பட மாட்டாது என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது