• Do.. Jan. 16th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Dezember 2022

  • Startseite
  • திருகோணமலையில் இளம் தாய்க்கு நேர்ந்த சோகம்

திருகோணமலையில் இளம் தாய்க்கு நேர்ந்த சோகம்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் இரைப்பையழற்சி (கேஸ்டிக்) காரணமாக அனுமதிக்கப்பட்ட இளம் தாயொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஒன்பதாம் திகதி கேஸ்டிக் மற்றும் குளிர் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.…

திடீர் மாரடைப்பும் உடனடி மரணமும் அதிகரிக்க என்ன காரணம்?

பலருக்கும் திடீர் மாரடைப்பு ஏற்படும் வீடியோக்கள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதைப் பார்க்க முடிகிறது. ஒரு வீடியோவில் திருமணத்தில் நடனமாடிக்கொண்டிருக்கும் நபர் திடீரென தரையில் விழுவதைக் காண்கிறோம். மற்றொரு வீடியோவில், ஒரு விழாவில் கையில் பூங்கொத்தை ஏந்திச்சென்றுகொண்டிருக்கும் ஒரு…

டுவிட்டரில் இன்றுமுதல் புதிய குறியீடு

டுவிட்டரில் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் கணக்கு அதிகாரபூர்வமானது என்பதை உறுதிபடுத்த, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற குறியீடு (புளூ டிக்) குறிக்கப்பட்டிருக்கும். இதன்மூலம், குறிப்பிட்ட பயனாளர்கள் டுவிட்டரில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு…

பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு எச்சரிக்கை!

பிரான்ஸில் தமிழர்கள் அதிகம் வாழும் பாரிஸில் கொள்ளையன் ஒருவன் தபால் ஊழியர் போன்று வேடமிட்டு ஏமாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதுவரை 691,000 யூரோ பணத்தினை போலி தபால் ஊழியர் கொள்ளையிட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை Yvelines இவ்லின் நகர பொலிஸார்…

கனடாவில் விரைவில் அமுலுக்கு வரவுள்ள தடை

கனடாவில் ஒரு தடவை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் வகைகளுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. இந்த மாத இறுதி முதல் இந்த தடை நாடு தழுவிய ரீதியில் அமல்படுத்தப்பட உள்ளது. ஒரு தடவை பயன்படுத்தக்கூடிய அல்லது சிங்கிள் யூஸ் பிளாஸ்டிக் வகைகள் உற்பத்தி செய்யப்படுவது…

மாண்டஸ் புயலை தொடர்ந்து மீண்டும் ஒரு புயல் எச்சரிக்கை!

வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, 12.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால்…

யாழில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இன்று காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜா (வயது 43) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில்…

யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவைகள் இன்று 12 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. முதல் விமானம் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி சர்வேதச விமான நிலையத்துக்கு வரவுள்ளது. யாழ்- சென்னை இருவழி விமான பயணச் சீட்டு 62 ஆயிரம் ரூபா…

யாழில் தொலைபேசி வழியாக 9500 ரூபாய் பணம் மோசடி !

வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளுக்கு உதவுவதாக கூறி தொலைபேசி வழியாக 9500 ரூபாய் பணத்தை சுருட்டிய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பம் ஒன்றிடமே குறித்த 9500 ரூபாய் பணத்தை மோசடி கும்பல் சுருட்டியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும்…

காய்ச்சல், தலைவலி இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடுங்கள்

காய்ச்சல், தலைவலி மற்றும் உடல்வலி போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் பொதுமக்களிடம் கோரியுள்ளனர். இந்த நாட்களில் மழையுடனான காலநிலை நிலவுவதன் காரணமாக டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதும்…

மண்டோஸ் புயலால் வடக்கில் 3000 பேர் பாதிப்பு.. 500 வீடுகள் சேதம்.

மண்டோஸ் சூறாவளி காரணமாக கடந்த சில நாட்களாக வடக்கில் ஏற்பட்ட கடும் மழை, சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக 820 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2770 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கிட்டத்தட்ட 500 வீடுகள் சேதமடைந்துள்ளதாக வடமாகாண அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed