லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து பிரான்ஸ் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவசரமாக தரையிறக்கக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து பிரான்சிலுள்ள Nice நகருக்கு நேற்று மாலை 5.15 மணிக்கு புறப்படவேண்டிய விமானம், புறப்பட்டு சிறிது நேரத்தில் மீண்டும் ஓடுபாதைக்கே திரும்பியுள்ளது.
குறித்த விமானத்தில் புகை எழுந்ததாகவும், பயணிகள் ஏதோ வித்தியாசமான வாசனையை உணர்ந்ததாகவும் கூறப்படுகின்றது.
இதனையடுத்து , விமானிகள் ஆக்சிஜன் மாஸ்க் அணிந்துகொண்டதாகவும், தீயணைப்பு வாகனங்கள் சூழ்ந்து நிற்க, விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கியதாகவும் பயணி ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதனை யடுத்து பயணிகள் மாற்று விமானத்துக்காக காத்திருக்க, சுமார் இரண்டு மணி நேர தாமதத்திற்குப்பின் மீண்டும் விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. எனினும் விமானத்தில் என்ன பிரச்சினை என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.