• Mo. Nov 25th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிட்சர்லாந்தில் என்னென்ன பணிகளுக்கு எவ்வளவு ஊதியம் ?

Dez 30, 2022

சுவிட்சர்லாந்தில் என்னென்ன பணிகளுக்கு எவ்வளவு ஊதியம் தெரியுமா.? சுவிஸ் பெடரல் புள்ளியியல் அலுவலகம் திங்கட்கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சுவிட்சர்லாந்தில் முக்கியமான சில பணிகள் செய்வோர் சராசரியாக பெறும் ஊதியம் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் பணி செய்வோர் பெறும் சராசரி ஊதியம்

சுவிட்சர்லாந்தை பொருத்தவரை, நிதித்துறையில் பணி செய்வோரின் சராசரி ஊதியம்தான் உயர்ந்ததாக உள்ளது. சுவிற்சர்லாந்தின் எந்தெந்த துறையில் பணியாற்றுகிறவர்கள் எவளவு ஊதியம் சராசரியாக பெறுகிறார்கள் என்ற விபரங்களை பார்க்கலாம் வாங்க..

  • நிதித்துறையில் பணியாற்றுவோர் மாதம் ஒன்றிற்கு 10,211 சுவிஸ் ஃப்ராங்குகள்
  • மருந்தகத்துறையில் பணியாற்றுவோர் மாதம் ஒன்றிற்கு 10,040 சுவிஸ் ஃப்ராங்குகள்
  • தகவல் தொழில்நுட்பத்துறையினர் 9,200 சுவிஸ் ஃப்ராங்குகள் ஊதியம் பெறுகிறார்கள்.

குறைவான ஊதியம்

குறைவான ஊதியம் பெறுவோர் என்று பார்த்தால், ..

  • விருந்தோம்பல் துறையில் பணியாற்றுவோர் மாதம் ஒன்றிற்கு 4,479 சுவிஸ் ஃப்ராங்குகள் ஊதியம் பெறுகிறார்கள்.
  • சில்லறை வர்த்தகத்துறையிலுள்ளவர்களும் மாதம் ஒன்றிற்கு 4,997 சுவிஸ் ஃப்ராங்குகள் ஊதியம் பெறுகிறார்கள்.
  • மிகக்குறைந்த வருவாய் என்று பார்த்தால், சுவிட்சர்லாந்தில் முடிதிருத்துவோர், அழகியல் கலைஞர்கள் போன்றவர்கள் மாதம் ஒன்றிற்கு 4,211 சுவிஸ் ஃப்ராங்குகள் ஊதியம் பெறுகிறார்கள்.

நடுத்தர ஊதியம் என்று பார்த்தால்,

  • சுகாதாரத்துறையில் பணியாற்றுவோர் மாதம் ஒன்றிற்கு 6,821 சுவிஸ் ஃப்ராங்குகளும்,
  • உற்பத்தித்துறையில் பணியாற்றுவோர் மாதம் ஒன்றிற்கு 7,141 சுவிஸ் ஃப்ராங்குகளும் ஊதியம் பெறுகிறார்கள்.
  • இன்னொரு முக்கிய விடயம், தாங்கள் பணிபுரியும் துறை சார் கல்வி கற்றவர்கள், மற்றவர்களை விட நல்ல ஊதியம் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed