தென் கிழக்கு ஆசிய நாடான வியட்நாமைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் உலகில் எங்கும் இல்லாத வகையில் தனது வீட்டை முழுவதும் தங்கத்தை கொண்டு கட்ட விரும்பி, அதை செயல்வடிவமாக மாற்றியுள்ளார்.
இது எப்படி சாத்தியம் என பலரும் ஆச்சரியத்துடன் தங்க மாளிகையை காண குவிய நிலையில் சுற்றுலாத்தலமாக அவரது வீடு மாறியுள்ளது.
வியட்நாமைச் சேர்ந்தவர் ஈகுவன் வான் ட்ரங். ரியல் எஸ்டேட் தொழிலதிபரான அவர் தன் வீட்டை வித்தியாசமாக கட்ட வேண்டும் என விரும்பியுள்ளார்.
இதற்காக பல நாடுகளுக்கு பயணித்து பல வீடுகளை பார்வையிட்டுள்ளார். பின்னர் இவர் வீட்டை மின்னும் தங்கத்தால் கட்ட முடிவு செய்துள்ளார்.
இதற்காக கட்டடக் கலைஞர்களை அழைத்து வீட்டை தங்கத்தால் கட்ட ஆரம்பித்துள்ளார். இந்த வீட்டை கட்டுவதற்கு சுமார் மூன்று வருடங்கள் ஆனதாக கூறப்படுகிறது. சுவர் முதல் ஒவ்வொரு இடமும் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.
மேலும் அந்த வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. இந்த தங்க வீட்டை முழுமையாக கட்டி முடித்த பின்னர் சுற்றுலா தலமாக மாற்றப்பட்டது.
சுமார் மூன்று தளங்களை கொண்ட இந்த தங்க வீடு, தனித்துவமான கட்டிடக்கலை, தங்க பால்கனி, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பல சிலைகள் உள்ளிட்ட அனைத்தும் மக்களின் கவனத்தை ஈர்க்கிறது.
இதனால் இங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வீட்டை சுற்றிப் பார்க்க இந்திய மதிப்பில், சுமார் ரூ.400 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
இங்கு வரும் பயணிகளின் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக வீட்டிற்கு பக்கத்தில் ஒரு ஹோட்டலை ஈகுவன் வான் ட்ரங் திறந்துள்ளார்.
வாயில்கள் முதல் சுவர்கள் வரை, விளக்குகள் முதல் சமையல் பாத்திரங்கள் வரை வீட்டின் ஒவ்வொரு பொருட்களிலும் பளபளக்கும் தங்கம் உள்ளன.
‚இது உண்மையான தங்கமா அல்லது போலியான தங்கமா என்று எனக்குத் தெரியவில்லை.
ஆனால், இவ்வளவு தங்கம் பதிக்கப்பட்ட வீட்டைப் பார்த்து வியப்படைகிறேன்‘ என ஒரு சுற்றுலாப்பயணி ஆச்சர்யம் விலகாமல் கூறுகிறார்.