பிரான்ஸில் தமிழர்கள் அதிகம் வாழும் பாரிஸ் புறநகர் பகுதி வாழ் மக்களுக்கு அந்நாட்டு காவல்துறையினர் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
பாரிஸி்ன் புறநகர் பகுதியான சென் ஏ மார்ன் உட்பட பல பகுதிகளில் போலியாக உலாவரும் காவல்துறையினரால் மக்கள் ஏமாற்றப்படுவதாக முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன.
உண்மையான காவல்துறை அதிகாரிகளின் சீருடையை ஒத்த வகையில் காணப்படும் போலி காவல்துறையினரால் மக்கள் பாரிய அளவில் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த போலி காவல் அதிகாரிகள் வயோதிபர்கள் உள்ள வீடுகளை நோட்டமிட்டு குறி வைப்பதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரண்டு இரண்டு பேர்களாக இந்த போலி காவல் அதிகாரிகள் வீடுகளுக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அவர்களில் ஒருவர் தாம் திருட்டு சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக கூறும் நிலையில் மற்றைய நபர் வீட்டிற்குள் ஏதாவது ஒரு பொருளை திருடி விடுவதாக தெரியவந்துள்ளது.
எனவே இவர்கள் தொடர்பில் மக்கள் கடும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டுமென பிரான்ஸ் காவல்துறையினர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.