வீட்டில் பணப்புழக்கம் தாராளமாக இருக்க பணம் நம்மிடம் வந்து சேர நம்மிடம் பணத்தை ஈர்க்கும் சக்தி இருக்க வேண்டும்.
அப்போது தான் பணமானது நம்மை தேடி வரும். அத்துடன் வந்த பணம் கையில் தாங்கும், சுப செலவுகள் நடக்கும். இதற்கக நாம் செய்யக்கூரிய இலகுவான பரிகாரங்கள் உள்ளன. பணம் வீட்டில் தங்கவதற்கு நாம் செய்யவேண்டியது இதுதான்.
பரிகாரம்
இதற்காக நமக்கு தேவையானவை இரண்டு. ஒன்று கல் உப்பு இன்னொன்று படிகாரம் .
இதை வைப்பதற்கு கண்ணாடிக் குடுவை அல்லது மண் பானை வேண்டும். கண்ணாடி, மண் இவை இரண்டுமே மண்ணால் ஆன பொருள் இதில் வைக்கும் போது இந்த பொருளின் ஆற்றலை அதிகரிக்கும்.
பொன், வெள்ளி, பித்தளை, பிளாஸ்டிக் போன்ற பொருட்களை இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது.
எப்படி பயன்படுத்த வேண்டும்?
இந்த பரிகாரத்தை செவ்வாய், வியாழன், வெள்ளி மூன்று நாட்களில் இந்த செய்யலாம். ஒரு கண்ணாடி குடுவை நிறைய உப்பு எடுத்துக் கொள்ளுங்கள். அதன் நடுவில் ஒரு சிறிய படிகார துண்டு சொருகி வைத்து விடுங்கள்.
இந்த பரிகாரம் யார் செய்கிறார்களோ அவர்களை தவிர மற்றவர் யாருக்கும் இந்த பொருளை அங்கு வைத்திருப்பது தெரியக் கூடாது.
இவை இரண்டையும் ஒன்றாக வைத்து உங்கள் வீட்டில் பணம் வைக்கும் பீரோவுக்கு அடியில் வைத்து விடுங்கள்.
தொடங்கும் நாள்
இதை முதலில் தொடங்கும் நாள் வெள்ளி, வியாழன், செவ்வாய் போன்ற நாட்களில் தொடங்கிக் கொள்ளுங்கள். இதை மாற்றுவது அமாவாசை அன்று தான் மாற்ற வேண்டும்.
ஒவ்வொரு அமாவாசையிலும் இதை மாற்றும் போது இந்த உப்பை எடுத்து தண்ணீரில் நன்றாக கரைத்து செடிகளில் ஊற்றி விடுங்கள். படிகாரத்தை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மட்டும் மாதம் மாற்றிக் கொள்ளுங்கள்.
இந்த பரிகாரம் செய்யத் தொடங்கிய உடனே உங்களுக்கு நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும்.
உங்கள் கையில் எப்போதும் பணம் புழங்கிக் கொண்டே இருக்கும். நல்ல ஆற்றல் உங்களுக்குள் தோன்றுவதை நீங்களே உணர முடியும்.