யாழ்.சிறுப்பிட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கணேஸ் துஜீவன் (வயது23) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் தங்கி நின்ற இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்று முன் தினம் மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
இறப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன், இளைஞன் தவறான முடிவெடுத்திருக்கலாமா? என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.